கே.எல். ராகுலை வென்ற ஷ்ரேயாஸ் அய்யர் …!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஜிம்மில் ரோப் சேலஞ்சு போட்டியில் பங்கேற்ற வீடியோவை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அதிர்ச்சியளித்தது. இதனால் தொடரில் 1-0 என வங்கதேச அணி முன்னிலை வகிக்க இரு அணிகளுக்குமிடையேயான இரண்டாவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Image result for india vs bangladesh t20

இதனிடையே பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். அப்போது கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் ரோப் சேலஞ்சு என்றழைக்கப்படும் போட்டியில் ஈடுபட்டனர். ஒதுக்கப்பட்ட 30 விநாடிகளில் யார் அதிக முறை கயிற்றை மேலெழுப்பி உடற்பயிற்சி செய்கிறார்கள் என்பதே போட்டியாகும்.

இதில் கே.எல். ராகுல் 45 முறை அந்த உடற்பயிற்சியை செய்தார். பின்னர் இதை செய்த ஷ்ரேயாஸ் அய்யர் 50 முறை கயிற்றை மேலெழுப்பி சக அணி வீரரான ராகுலை வென்றார். இந்திய வீரர்கள் எப்போதும் ஃபிட்டாக உள்ளனர் என்பதை உணர்த்தவே இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.கடந்த போட்டியில் பெரிதாக சோபிக்காத கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் இன்றையப் போட்டியில் மிகப்பெரிய எண்ணிக்கையில் ரன்களைக் சேர்த்தால் இந்திய அணி கூடுதல் பலம் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *