தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா. இந்த தம்பதிகளுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நயன்தாரா தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று கிஸ் டே கொண்டாடப்படுவதால் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய மனைவி நயன்தாராவுக்கு நெற்றியில் முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருவதோடு லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.