“டிப்-டாப்பா ட்ரெஸ் பண்ணுங்க “கிரிஜா வைத்தியநாதன் அறிவுரை ..!!

தலைமைச் செயலகத்தில் வேலைபுரியும்  அரசு ஊழியர்கள் உடை உடுத்துவதில்  புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆணையிட்டுளார்.

தலைமை செயலகத்தின்   நல்மதிப்பை பராமரிக்கும் வகையில் அங்கே பணிபுரியும்    அரசு ஊழியர்கள், ஒழுக்கமான உடைகளை அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

பெண் ஊழியர்கள் சேலை, சல்வார்  சுடிதார் போன்ற உடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்  என்றும்  சேலையைத் தவிர மற்ற ஆடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆண் ஊழியர்கள் அனைவரும் பேண்ட் மற்றும் சட்டை ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் எனவும், டீ-சர்ட், வேஷ்டி போன்ற உடைகளை அணியக்கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உடைகளை அணியும் பொழுது மெல்லிய வண்ணத்தில் இருக்கக் கூடிய உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும் எனவும் கண்களைக் கூச வைக்கும் வகையில் இருக்கக் கூடிய அடர் நிற உடைகளை அணியக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.