இன்றைய ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா…. RCB VS KXIP பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில்  இன்றைய ஆட்டத்தில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன 

2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

பஞ்சாப் அணி இத்தொடரில் 7 போட்டிகள் விளையாடி 4ல் வெற்றியும் 3ல் தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி சொந்த ஊரான மொஹாலியில் இந்த சீசனில்   இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அந்த அணிக்கு கூடுதல்  நம்பிக்கை அளிக்கிறது. கெயில்  முதுகு வலி காரணமாக அவதி படுவதால் இந்த போட்டியில் களமிறங்குவது சந்தேகம் தான். கே.எல் ராகுல் கடந்த போட்டியில் சதம் விளாசியும் பஞ்சாப் அணியால் வெல்ல முடியவில்லை. இந்த போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்க உள்ளது.

பெங்களூரு அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 6 போட்டியில் ஆறிலும் தோல்வியடைந்த ஒரே அணி பெங்களூரு. இந்த அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் இருந்தும் சரியாக அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்தது. அந்த போட்டியிலும் ரஸெலின் அதிரடியில் போட்டி கை விட்டு போனது. வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கோலி யூகம் வகுத்தால் மட்டுமே வெற்றியை வசமாக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. பெங்களூரு அணி இனி வரும் 8 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை பற்றி நினைத்தாவது பார்க்க முடியும். 5 நாள் இடைவெளியில் களமிறங்கும் பெங்களூரு அணி வெற்றி பெறுமா என்று பெங்களூரு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுவரை இரண்டு அணிகளும் 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் பஞ்சாப் அணி 12 முறையும், பெங்களூரு அணி 10 முறையும் வென்றுள்ளது.

Image result for Dale Steyn

மேலும் பெங்களூரு அணி ஆஸி வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நைல்-ஐ ஐபிஎல்லில் ஏலத்தில் எடுத்திருந்தது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியதால் அவரால் பெங்களூரு அணியில் பங்கேற்கவில்லை. பின்னர் அணியில் சேரும் நேரத்தில் காயம் ஏற்பட்டதால் அவரால் பெங்களூரு அணியில் விளையாட முடியவில்லை.இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் 2 ஆண்டு இடைவெளிக்கு  பின் ஐபிஎல்லில் கால் பதிக்க உள்ளார். அவர் வரும் 16ம் தேதியில் அணியில் பெங்களூரு அணியில் சேர  உள்ளார். டேல் ஸ்டெயின் ஏற்கனவே  2008 முதல் 2010 வரை பெங்களூரு அணிக்கு விளையாடியது குறிப்பிடத்தக்கது.