“ஆளில்லா விமானத்தில் மூலம் வந்த சிறுநீரகம்” உலக வரலாற்றில் சாதித்தது அமெரிக்கா…!!

உலகிலேயே முதன்முதலாக  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து  அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இந்த  சிகிச்சை நடந்தது. இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளிடம், உறுப்புகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் சேவையை தொடங்கியது.

ஆளில்லாத இந்த  ட்ரோன் இதற்காக   பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டடது. இது உலக வரலாற்றில்  முதல் முறையாக 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நோயாளியான பெண்மணிக்கு  சிறுநீரகத்தை சுமந்து சென்றது. கடந்த ஆண்டின் நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருந்த நிலையில் இந்த ட்ரோன் சேவை நோயாளிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.