லியோ படக்குழுவுக்கு டாட்டா சொன்ன கேஜிஎஃப் வில்லன் சஞ்சய் தத்….!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் சஞ்சய் தத் படப்பிடிப்பில் இணைந்தார்.

நடிகர் சஞ்சய் தத் தற்போது தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். தகவலை படக்குழு புகைப்படம் வெளியிட்ட அறிவித்துள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply