லோகி சினிமாட்டிங் யுனிவர்ஸ் போல் “கே.ஜி.எஃப்”?…. வெளியான புது அப்டேட் நியூஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

பிரசாந்த்நீல் இயக்கத்தில் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கே.ஜி.எஃப் முதல் பாகம் சென்ற 2018-ம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா அவினாஷ், அச்யுத்குமார், ஆனந்த் நாக் உட்பட பலர் நடித்து இருந்தனர். கன்னடத்தையும் தாண்டி தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதையடுத்து கடந்த தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்,.14ம் தேதி வெளியாகிய “கே.ஜி.எஃப்-2” இந்திய அளவில் மிகப்பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது.

அதன்பின் கே.ஜி.எஃப்-3 படத்திற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படத்தை 5 பாகங்களாக எடுக்க படக்குழு திட்டமிட்டு உள்ளது. அதாவது, ஜேம்ஸ்பாண்ட் சீரிஸ் முறையில் வெவ்வேறு நடிகர்களை வைத்து கே.ஜி.எஃப் படத்தின் மீதமுள்ள பாகங்களை எடுக்க படக் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக 2025ம் வருடம் படப்பிடிப்பு துவங்கவுள்ள “கே.ஜி.எஃப். 3” படத்தில் நடிகர் யஷ் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

அதோடு கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த்நீல், தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் “சலார்” படத்தில் நடிகர் யஷ்ஷை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளார். ஏனென்றால் லோகேஷ் கனகராஜ் தன் படங்களில் பயன்படுத்தும் லோகி சினிமாட்டிங் யுனிவர்ஸ் போல் “கே.ஜி.எஃப்” மற்றும் “சலார்” படத்திற்கு இடையில் ஒரு கனெக்ஷனை ஏற்படுத்த இயக்குநர் பிரசாந்த்நீல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

Leave a Reply