கெட்டுபோன மீன்கள் விற்பனையா….? அதிகாரிகளின் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!!

கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நவீன மீன் மார்க்கெட் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்களை நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் பரிசோதனை செய்வர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தினருக்கு அப்பகுதியில் இருக்கும் கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளது.

அந்த புகாரின் படி நகராட்சி அலுவலர்கள் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரமற்ற முறையில் கெட்டுபோன மீன்களை விற்பனை செய்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதே போல் மீண்டும் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அவர்களை எச்சரித்துள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *