கேரளாவில் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க … பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சி …தொண்டர் விபத்தில் பலியான சோகம் …!!!

கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது, பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் , பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கேரள மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக,இறுதிக்கட்ட வாக்கு பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அனைத்து கட்சி அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்திலுள்ள ,ஆரியநாடு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியில் போட்டியிட உள்ள ,சபரிநாதன் வாக்கு சேகரிக்க வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில், இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கார்கள் ,இருசக்கர வாகனங்கள் மூலம் ,சாலையில் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதில் திருவனந்தபுரம், பெரியநாடு பகுதியை சேர்ந்த, பிரதீப் என்ற காங்கிரஸ் கட்சி தொண்டர் இருசக்கர வாகனம் மூலம்  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் சாலகோணம் பகுதியை வந்துகொண்டிருந்தபோது ,சாலையோரமாக நின்றுகொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கதவை திறந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய பிரதீப், இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில், இவருக்கு  பின்னால் வந்து கொண்டிருந்த கேரள அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார் .

இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை, பிரச்சார ஊர்வலத்தில் இருந்த தொண்டர்கள் மீட்டு, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது ,அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இறந்த பிரதீப்பின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ,திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்டு தொண்டர் ஒருவர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.