கேரளாவுக்கு உதவுங்கள் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் மீண்டும் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.

இந்த மூன்று நாட்களில் மட்டும் பெய்த கனமழையால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் உரிழந்தவர்களின் எண்ணிக்கை 127-ஆக அதிகரித்துள்ளது. 21 பேரை காணவில்லை என்றும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரள மக்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர். இதற்க்கு ஏற்றார் போல அம்மாநில முதல்வர் பினராய் விஜயன்_னும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் வெள்ளம் கேரளத்தை துவைத்து எடுத்த போது கேரளாவுக்கு தமிழகம் துணையாக நின்றது. பள்ளி , கல்லூரி மாணவர்கள் நிவாரண பொருட்கள் அனுப்பினர். பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கேரளவுக்காக கையேந்தி நிவாரண உதவி செய்தனர் .தமிழகத்தின் இந்த உதவிக்கு நெகிழ்ந்து போன கேரளா கஜா புயலின் போது டெல்ட்டா மாவட்டத்தை தாங்கி பிடித்தது.
இந்நிலையில் தற்போது கேரளத்தை வெள்ளம் மூழ்கடித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தன்னுடைய ட்வீட்_டர் பக்கத்தில் கடந்த 13-ஆம் தேதி அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டு உதவியை கோரி இருந்தார்.தற்போது மீண்டும் கேரள முதல்வர் தமிழில் ட்வீட் செய்து உதவியை கோரியுள்ளார்.தமிழ் மக்கள் எப்படியாவது தங்களை மீட்பர்கள் என்ற நம்பிக்கையுடன் முதல்வர் இந்த முயற்சியை எடுத்து வருகின்றார். முதல்வரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி உள்ளதோடு நீங்கள்தான் மக்களுக்கான உன்னத முதல்வர் என்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை புனரமைப்போம்
முதலமைச்சர் நிவாரண நிதியில் நமது பங்களிப்பை செலுத்துவோம்முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி
கணக்கு எண்: 67319948231
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, திருவனந்தபுரம் கிளை.
ஐ.எப்.எஸ்.சி :SBIN0070028ஸ்விப்ட் கோடு: SBININBBT08
சேமிப்பு கணக்கு
பேன் எண்: AAAGD0584M— Pinarayi Vijayan (@vijayanpinarayi) August 19, 2019