கேரளா ஸ்டைல் கடலை கறி!!!

 சாதம், சப்பாத்தி, புட்டுக்கு ஏற்ற ஒரு சூப்பர் சைடிஷ்  கேரளா ஸ்டைல் கடலை கறியை செய்யலாம் வாங்க. 

தேவையான பொருட்கள் :

கருப்பு கொண்டைக்கடலை – 100 கிராம்

வெங்காயம் – 1

தக்காளி – 1

தேங்காய் துருவல் – 3 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய் -1

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

உப்பு – ருசிக்கேற்ப

கருப்பு கொண்டைக்கடலை க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த கடலையுடன்   மஞ்சள் தூள்,  உப்பு போட்டு குக்கரில்  10 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை , லேசாக  வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன்  மல்லிப்பொடி, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து , ஆறியதும்  மிக்சியில் போட்டு  தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்று க்கான பட முடிவு

 

பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு  கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம் ,தக்காளி, பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து, எண்ணெய் தெளிந்து வரும் வரை  வதக்க்கி கொள்ள வேண்டும். பின் அதனுடன் அரைத்த மசாலா, சிறிது  தண்ணீர் மற்றும் வேக வைத்த கொண்டைக் கடலையை   சேர்த்து குழம்பு கெட்டியானதும்  இறக்கினால்   சத்தான கேரள கடலை கறி தயார் !!!