“20 கோடி பட்ஜெட்டில் உருவான கேரளா ஸ்டோரி”…. 20 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை…. படககுழு அறிவிப்பு…!!!

உலகம் முழுவதும் கடந்த 5-ம் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கேரளா ஸ்டோரி படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் படத்திற்கு எந்த தடையும் விதிக்க கூடாது என தீர்ப்பு வழங்கியது. கேரளாவைச் சேர்ந்த பெண்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு பயங்கரவாத அமைப்பில் சேர்வது போன்று கேரளா ஸ்டோரி படத்தின் கதை அமைந்துள்ளது.

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 20 நாட்களில் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திகேரளா ஸ்டோரி படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ‌

Leave a Reply