“சபரிமலை காரணமில்லை” தோல்வி குறித்து கேரள முதல்வர் கருத்து…!!

கம்யூனிஸ்ட்களில் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை என்று கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவு கடந்த 23_ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் அசுர வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் படு தோல்வியடைந்தது. இடதுசாரிகள் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம் , திரிபுராவில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . அதே போல கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் அங்கே 20 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல தமிழகத்தில் 4 இடங்களில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் , கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட்டதால் அவர் பிரதமராக்கவேண்டுமென்ற என்ற நம்பிக்கையில் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய தேவை இல்லை. இது நாடாளுமன்றத்துக்க்கான தேர்தல். சட்டமன்ற தேர்தல் கிடையாது என்று கேரள முதல்வர் தெரிவித்தார்.