“கை நரம்புகளை வைத்து உங்களை அடையாளம் காண முடியும்”… அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்…!!

இனி உங்களது கை நரம்புகளை வைத்தே உங்களை அடையாளம் காண முடியும். எப்படி தெரியுமா? இதற்கான தொழில்நுட்பத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பயோமெட்ரிக்  மூலம் அடையாளம் காணும் முறை சமீபத்திய ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விமான நிலையங்களில் இருந்து போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள், வங்கிகள், பெரிய தொழில் நிறுவனங்கள் என்று எல்லா இடங்களிலும் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டாலும் அதிலும் மோசடிகள் நடப்பது உண்டு. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சில பயோமெட்ரிக் முறையைக் கண்டறிந்துள்ளனர்.

போலிகளை கைரேகையை  உருவாக்க ஒருவர் தொட்ட மேற்பரப்பிலிருந்து கைரேகைகள் சேகரிக்கலாம். இதையடுத்து சமூக ஊடங்களில் இருந்து பெறப்பட்ட படங்களை பயன்படுத்த அடையாள தொழில்நுட்பத்தில் மோசடி செய்ய முடியும். மேலும் கருவிழி அடிப்படையிலான வழிமுறைகளை குழப்புவதற்கு கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தப்படலாம் என்று நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பள்ளி ஆராய்ச்சியாளர் சையத் ஷா  கூறியுள்ளார்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கை நரம்புகளைக் கொண்டு அடையாளம் காணும் தொழில்நுட்பம் சற்று வித்யாசமாக இருக்கும். சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது. நரம்பு வடிவங்கள் தோலுக்கு அடியில் கிடைக்கின்றது. இதனால் கைரேகைகள் நகல் எடுப்பது, அடையாளத்திற்காக சமூக ஊடகங்களில் புகைப்படங்களை திருடுவது, காண்டாக்ட் லென்ஸ் மூலம் கருவிகளை மாற்றி அமைப்பது போன்ற மோசடிகளில் ஈடுபடமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ககண்டுபிடிப்புக்காக இன்டெல் ரியல்சென்ஸ் டி 415 டெப்த் கேமரா அதாவது ஆஃப்-தி-ஷெல்ஃப் டெப்த் தொழில்நுட்பம் கொண்ட கேமராவைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 35 நபர்களிடமிருந்து சுமார் 17,500 படங்களை ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர். ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களின் கைகளை இறுக்கமாக மூடி வைத்திருக்கும்படி செய்து, பின்னர் அவர்கள் கைகளில் தோன்றும் நரம்பு வடிவங்களைக் கைப்பற்றினர். அம்சங்களை பிரித்தெடுத்து ஆராய்ச்சியில் பங்கேற்ற 35 நபர்களை கொண்டு குழுவிலிருந்து 99 க்கும் அதிகமான துல்லியத்துடன் ஒரு நபரை அடையாளம் காணப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

விசேஷமாக, நரம்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு கைகளை இறுக்கமாக மூட வேண்டும் என்பதால் மோசடி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பிறரின் நரம்புகளின் வடிவங்களை விரைவாக பெறுவது கடினம் என்று ஆராய்ச்சியாளர் விளக்குகின்றனர். மக்களை அடையாளம் காண நரம்புகளை பயன்படுத்துவதற்கான யோசனை புதிதல்ல என்றாலும், அதற்கு வழக்கமான சிறப்பு தொழில்நுட்பம் தேவைப்படுகின்றது. தற்போது கண்டுபிடித்துள்ளதாக தனிப்பட்ட சாதனங்களில் தனிநபர்களை அங்கீகரிப்பதற்கு இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *