“பாரத் ராஷ்ட்ரிய சமிதி” தேசியக் கட்சியை தொடங்கும் கேசிஆர்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர் ராவ் இருக்கிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராவார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல மாநிலங்களுக்கு வருகை புரிந்தார். அதாவது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் கேசிஆர் பல மாநிலங்களுக்கு வருகை புரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைப்பதற்கு கேசிஆர் முயற்சி செய்கிறார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக மீண்டும் தேசிய அரசியலில் ஈடுபடும் நோக்கத்தில் கேசிஆர் ஈடுபட்டுள்ளார். அதோடு தன்னுடைய கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் கேசிஆர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட சில தலைவர்களை சந்தித்து பேசினார். இதனையடுத்து தன்னுடைய கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தேசிய கட்சியாக மாற்றுவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் முதல்வர் சந்திரசேகர் ராவ் தசரா பண்டிகையை முன்னிட்டு தேசிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு‌‌ 2 வார காலத்திற்குள் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தையும் கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.