என்னா ஆட்டம்… திருமண நிகழ்ச்சியில் மேடை ஏறி கலக்கிய கத்ரீனா!!

நண்பரின் திருமண நிகழ்வுக்கு சென்ற கத்ரீனா கைஃப், அவருடன் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 நண்பரும் முக அழகியல் (மேக்கப்) கலைஞருமான டேனியல் பவர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், திடீரென நடனமாடி அங்கு வந்திருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்தார். 2015இல் கத்ரீனா நடிப்பில் வெளியான ‘பேன்தோம்’ படத்தில் இடம்பெறும் ‘ஆஃப்கான் ஜிலேபி’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் பாடலில் ஆடியிருந்த கத்ரீனாவின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையடுத்து கோவாவில் நடைபெற்ற பிரபல முக அழகியல் கலைஞர் டேனியல் பவர் திருமணத்துக்கு சென்றிருந்த நடிகை கத்ரீனா கைஃப், ‘ஆஃப்கான் ஜிலேபி’ பாடலுக்கு டேனியலுடன் இணைந்து நடனமாடி பார்வையாளர்களைக் கலகலப்பூட்டினார். நீல நிற ரவிக்கையுடன், லெகன்கா அணிந்துவந்து அனைவரின் கண்களையும் தன் மீது திரும்பவைத்த கத்ரீனா, இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

டைரோன் பிராகன்ஸா என்பவரை இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார் டேனியல் பவர். இதனிடையே கத்ரீனா – டேனியல் ஆடும் நடன விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருவதுடன், அதிகமாகப் பகிரப்பட்டும்வருகிறது.

தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஜோடியாக ‘சூர்யவன்ஷி’ என்ற படத்தில் நடித்துவருகிறார் கத்ரீனா கைஃப். இந்தப் படத்தை பாலிவுட் கமெர்ஷியல் இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்குகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் மார்ச் மாதம் திரைக்குவரவுள்ளது ‘சூர்யவன்ஷி’.

https://twitter.com/Satzym/status/1213802201807835136

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *