முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற வாலிபர்…. மனைவி எடுத்த ஆக்சன்….!!!!

2-வது முறை திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் தெற்குவீதி பகுதியில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகில் ஜவுளிகடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் திருவலஞ்சுழி மணப்படையூர் பகுதியைச் சேர்ந்த கங்காஸ்ரீ என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். அப்போது சங்கரநாராயணன், கங்காஸ்ரீ இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு சங்கரநாராயணன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி சங்கரநாராயணன், கங்காஸ்ரீ இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து இருவரும் தஞ்சை பூக்காரத்தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 6 மாதமாக குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையில் சங்கரநாராயணனுக்கு அவரது தந்தை வேலாயுதம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு சங்கரநாராயணனும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கங்காஸ்ரீ அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் கங்காஸ்ரீ தரப்பினரும் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கங்காஸ்ரீக்கு ஆதரவாக அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் புகாரினை பெற்று உடனடியாக வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணனை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது சங்கரநாராயணனிடம் நடத்திய விசாரணையில் அவர் 2- வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் சங்கரநாராயணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *