‘காதல்’ பட பாணியில் காதலன் கொலை….. காதலியின் குடும்பத்தினர் கொடூர செயல்….. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!

பீகார் மாநிலம் பால்கர் மாவட்டம் கத்தார் கிராமத்தில் ரவுஷன் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கிடையில் இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரிய வந்து பெரிய பிரச்சனையானதாக கூறப்படுகிறது. ரவுஷன் குமார் அந்த இளம் பெண்னும் ஒரே சமூகம் என்ற போதிலும் அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. ஆனால் அந்த இளம் பெண் திருமணம் செய்ததால் ரவுஷன் குமாரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் கடந்த மாதம் ரவுஷன் வீட்டுக்கு சில குண்டர்களுடன் சென்றுள்ளனர். மறுபடியும் அவரிடம் இனி பேசக்கூடாது என்று ரவுஷன் குமாரிடம் அவர்கள் மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்களின் மிரட்டலுக்கு ரவுசன் குமார் பணியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிருந்தால் தங்களை சேர்ந்து வாழ விட மாட்டார்கள் என்று தெரிந்து கொண்ட ரவுஷன் குமாரு இளம் பெண்ணும் யாருக்கும் தெரியாமல் கடந்த மாதம் முசாபூர் மாவட்டத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒரு வீட்டை வாடைக்கு எடுத்து தங்கி அங்கே திருமணம் செய்து கொண்டனர். ரவுசன் குமாருக்கு உடனடியாக வேலை கிடைக்காதால் வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை வலைவீசி தேடிவந்துள்ளனர். இந்த சூழலில் ரவுசன் குமாரை முசாபர்பூர் மாவட்டம் ஹாச்பூரில் பார்த்ததாக இளம் பெண்ணின் குடும்பத்தினரிடம் கடந்த வாரம் சிலர் கூறியுள்ளனர். அதன் பேரில் ஹாஜ்ப்பூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த பெண்ணின் குடும்பத்தார் ரோஷன் குமாரின் புகைப்படத்தை காட்டி அங்கு உள்ளவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். இதில் அவர்கள் இருந்து வீட்டை அக்கம் பக்கத்தினர் காண்பித்தனர். இதனையடுத்து திடீரென வீட்டுக்கு வந்தவர்களை பார்த்து ரவுஷனுக்கும் இளம் பெண்ணுக்கும் பதட்டம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து பெண் வீட்டார் அவர்களை சமாதானம் படுத்தினர். நம்ம ஊருக்கு செல்லலாம் அங்கு உங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கிறோம் என்று அவர்கள் கூறினர். இதை நம்பி அந்த ஜோடிகளும் பெண் வீட்டாருடன் அன்று மதியம் காரில் சென்றனர். கார் ஹாஜ்பூர் பகுதியை தாண்டி பகுலி சவுக் பகுதியை அடைந்ததும், திருமணத்துக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருமாறு ரவுஷன் குமாரை பெண் வீட்டார் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அவரும் காரில் இருந்து இறங்கி உள்ளார். அவருடன் பெண்ணின் தந்தை, சகோதரர், மாமா ஆகியோரும் சென்றனர். அப்போது சாலை கடக்கும்போது ரவுஷன் குமார் கை, கால்களை பிடித்து தூக்கிய அவர்கள் அங்கு வந்து கொண்டிருந்த பஸ்ஸில் முன்பு தூக்கி எரிந்துள்ளனர். இதில் பஸ் அவர் மீது ஏறியதில் ரவுஷன் குமார் சம்பவ இடத்திலே உடல் நசங்கி உயிரிழந்தார். தன் கண்முன்னே கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த அந்த இளம் பெண் கதறி அழுதார். இந்த சம்பவத்தை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன் பிறகு போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் தகவலின் பெயரில் போலீசார் அங்கு வந்து ரவுஷன் குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய பெண் வீட்டார் மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.