பதுங்கியிருந்த 5 நக்சலைட்டுகள்…. சுட்டுத் தள்ளிய காவல்துறையினர்…. கட்சிரோலியில் பரபரப்பு..!!

கட்சிரோலி பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

மகாராஷ்டிராவின் தூரக்கிழக்கில் அமைந்துள்ள கட்சிரோலி பகுதியில் நக்சலைட்  தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்த பதுங்கியிருப்பதாக மராட்டிய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அந்த இடத்தை இன்று காலையில் சுற்றி வளைத்துள்ளனர்.

அதனை அறிந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு தரப்புக்கும் இடையே பெரும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அதில் 5 நக்சலைட்டுகள் போலீசாரால் கொல்லப்பட்டனர். மேலும் பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றார்கள்.