இதை யாரு செஞ்சிருப்பா…? அ.தி.மு.க கம்பத்தில் தொங்கிய செருப்பு…. தேனியில் பரபரப்பு….!!

கட்சி நிர்வாகிகள் ஏற்றி வைத்திருந்த கொடிக்கம்பத்தில் செருப்புகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள பாலூத்து கிராமத்தில் அ.தி.மு.க-வினர் கம்பம் அமைத்து கட்சி கொடி பறக்க விடப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பத்தில் இருக்கும் அ.தி.மு.க கொடி அகற்றப்பட்டு அதற்கு‌ பதில் ஒரு ஜோடி செருப்பு ஏற்றப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அ.தி.மு.க-வினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றிய தகவல் காட்டு தீ போல் அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்கு பரவி அ.தி.மு.க கட்சியினர் அங்கு திரண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடிக் கம்பத்தின் உச்சியில் தொங்கவிடப்பட்டிருந்த செருப்புகளை அகற்றியுள்ளனர். அதன்பின் அ.தி.மு.க-வினர் திரும்பவும் தங்களின் கொடியை ஏற்றி வைத்துள்ளனர். இதனை அடுத்து கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை அகற்றி விட்டு செருப்புகளை ஏற்றியது யாரென்று தெரியாத காரணத்தினால் இவற்றில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் அ.தி.மு.க கட்சியினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அதன் பேரில் கொடிக்கம்பத்தில் செருப்புகளை ஏற்றிய மர்ம நபர்கள் யார் என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *