திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொருளாளரும் , முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தேர்தல் வேளைகளில் பிஸியாக இருந்து வருகின்றார். அவருக்கு வேலூர் காட்பாடியில் வீடு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துரைமுருகன் வீட்டுக்கு வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும் , வீட்டில் சோதனை நடத்த வந்திருக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து இந்த சோதனையை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் திமுக_வின் தொண்டர்கள் மற்றும் திமுக_வின் வழக்கறிஞ்சர்கள் துரைமுருகன் வீட்டின் முன்பாக கூடினர் . சோதனை நடத்தும் அதிகாரிகளை கேட்டதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் என்றும் , தேர்தல் பார்வையாளர்கள் என்றும் முன்னுக்கு பின் முரணாக சொல்லி வருகின்றனர். இதனால் திமுக தரப்பினருக்கும் , சோதனை செய்ய வந்தவர்களுக்கும் நள்ளிரவு நேரத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது . இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.