கொடுத்த கடனை கேட்ட நபர்கள்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனூர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து பாஸ்போர்ட் கடை நடத்தி வந்திருக்கின்றனர். அப்போது கடையை விரிவாக்கம் செய்வதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருக்கின்றனர்.

அதன்பின் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணவேணி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த கணவர் பாபு தனது மனைவியின் அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *