காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா… ஆதரவாக 351…. எதிராக 72….. மக்களவையில் நிறைவேற்றம்…!!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மக்களவை மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும்  அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு  நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றியது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா இன்று மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது.

lok sabha க்கான பட முடிவு

மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றதொடு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு மக்களவையில்  நடைபெற்றது. மின்னணு வாக்கெடுப்பு மூலம்  நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மசோதா நிறைவேற்றப்பட்டது.