காஷ்மீர் சட்டப்பிரிவு இரத்து ”அவசரமாக விசாரிக்க முடியாது” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்தின வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெறாமல் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதமானதுமேலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லும் என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேணடுமென்று தெரிவித்திருந்தார்.

Image result for india supreme court

அப்போது நீதிபதி ரமணா   உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரியான நேரத்திலே விசாரணை நடத்தி எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அதற்கேற்றார் போல் உத்தரவை பிறப்பார் என்று  வழக்கறிஞர் சர்மாவின் அவசர வழக்கு மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் உச்சநீதிமன்றத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அளிப்பதற்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்வது குறித்து எந்த அவசரமான விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.