காஷ்மீர் – பஞ்சாப் எல்லையில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை…..!!

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை போர்  விமானங்கள் அதிவேகத்தில் பறந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. 

Image result for AF carries out major readiness exercise along Jammu and Punjab borders

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின்  தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக  இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில்   ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து  இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல்  நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை அந்நாட்டு விமானங்களை  விரட்டியடித்தது.

Image result for AF carries out major readiness exercise along Jammu and Punjab borders

இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று இரவு ஜம்மு- காஷ்மீர் பஞ்சாபின் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் தயார் நிலை ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது இந்திய  எல்லைப் பகுதிகளில் அதிவேகத்தில் பறந்து ஆயத்தமாக இருப்பதை இந்திய விமான படை விமானங்கள் வெளிப்படுத்தின.

Image result for Indian Air Force carries out major readiness exercise over Punjab and Jammu

பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கலாம்  என்பதால் அதனை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த போர் ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.