காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி…. பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு….!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா பாஸ்போர்ட் கோரி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்  மந்திரியான மெகபூபா முப்தி அவர்கள்  ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பதிவு செய்திருந்தார். அதன்பின் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்தது. அது தொடர்பாக பாஸ்போர்ட் அதிகாரி மெகபூபாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ‘காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் கீழ், தங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

நீங்கள் இது குறிப்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அமைப்பில் முறையிடலாம்’ என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்பின் மெகபூபா தனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சி.ஐ.டி. அறிக்கையின் அடிப்படையில் நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு நேரும் என்று கூறி எனக்கு பாஸ்போர்ட் வழங்குவது மறுக்கப்பட்டது. இதுதான் 2019ஆம் ஆகஸ்ட் க்கு பிறகு காஷ்மீரில் கொண்டுவரப்பட்டுள்ள இயல்பு நிலை  என்று கூறியுள்ளார்.