“காஸ்மீர் விவகாரம்” இந்தியா-பாகிஸ்தான் பகை தணிந்தது… டிரம்ப் கருத்து..!!

இரண்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த நிலையோடு ஒப்பிடும்போது இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் தணிந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

G7 உச்சி மாநாட்டின்போது பிரான்ஸ் அதிபருடன்  கடந்த 26ம் தேதி பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபரும்  சந்தித்து பேசினர். அப்போது கஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். காஸ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரங்கள் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஒப்புக் கொண்டார்.

Image result for india pakistan trump

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் இருப்பதாகவும்  ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன் இருந்த நிலையோடு ஒப்பிடும்போது மோதலில் சற்று அனல் தணிந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சனைக்கான உதவி குறித்து செய்தியாளர்கள் கேட்ட பொழுது பதிலளித்த டிரம்ப்,

Image result for india pakistan trump

இரு நாடுகளுடன் நல்லுறவை பேணி வருவதாகவும், இரு நாடுகளும் விரும்பினால் தான் உதவ தயார் என்றும் இவ்வாறு உதவ தயாராக இருப்பது இருநாட்டு அதிபர்களுக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார். உதவ தயார் என ஏற்கனவே தான் முன்வந்ததில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.