“கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாள்” முக.ஸ்டாலின் மரியாதை …!!

திமுக தலைவர் கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர்.

ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்பட்டுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் முக்கிய நிர்வாகிகள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.