தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி….. காங்கிரஸ் புகழாரம்….!!

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது.

ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் ,  கருணாநிதி தமிழ்நாட்டின் நீண்ட கால முதலமைச்சராக பதவி வகித்தவர். அவர் திராவிட இயக்கத்தின் , தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி. அவருடைய பிறந்த நாள் விழாவில் அவருடைய பங்களிப்புகளை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளது .

 

 

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *