கருத்தரிப்பதில் பிரச்சனையா …!!!கரு வலிமை பெற வேண்டுமா ?மணத்தக்காளி கீரை சாப்பிட்டு பாருங்க …

வாய் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு மணத்தக்காளி கீரை.தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ,வாய் புண் விரைவில் குணமடையும் .

100 கிராம் கீரையில் என்ன சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா ?

ஈரப்பதம் :82.1%

புரதம் :5.9%

கொழுப்பு :1%

தாது உப்புகள் :2.1%

மாவு சத்து :8.9%

மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைனு தெரிஞ்சிக்கணும்னு ஆவலா இருக்கீங்களா ?சரி வாங்க அதோட சிறப்ப பாக்கலாம் ….

நோயை குண மாக்குவதோடு மட்டுமல்லாமல் உடலின் கட்டுமான பகுதியை பார்த்து கொள்ள 410 மில்லி கிராம் கால்சியம் கொடுக்கிறது .

மூளை வளர்ச்சி ,மனதிற்கு சுறுசுறுப்பு இவைகளுக்கெல்லாம் 70 மில்லி கிராம் எரியம் கொடுக்கிறது .மணத்தக்காளி கீரை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு மட்டும் இல்லாமல் வேறு எந்த நோயும் வராத அளவு பார்த்து கொள்ளும் .

நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான 11 மில்லி கிராம் வைட்டமின் சி யும் இந்த மணத்தக்காளி கீரையில் உள்ளது .

மூல நோய்க்கும் ,குடல் பிரச்சனைக்கும் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்க விரைவில் குணமடையும் .நல்ல மருந்தாக மணத்தக்காளி கீரை உங்களுக்கு அமைய  கூடும் .

தொண்டையில் கட்டி அல்லது வீக்கம் இருந்தாலோ தினமும் மணத்தக்காளி கீரை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யும் .இக்கீரை உட்கொள்வதால் உடலில் வீக்கங்கள் ,கட்டி என எங்கு காணப்பட்டாலும் அதனை எதிர்த்து போரிடும் .அவற்றை குணப்படுத்தியும் விடும் .

சிறுநீர் கோளாறுகளை நீக்கும் ,சிறுநீர் நன்கு பிரியவும் வலி அமைத்து கொடுக்கும்.மணத்தக்காளி கீரையில் சிறிது கசப்பு தன்மை கொண்டது .ஆனால் இக்கீரையை சமைக்கும் பொழுது கசப்பு தன்மை நீங்கிவிடும் .

நீர்க்கோவை நோய் மிகசிறந்த முறையில் விரைவில் குணமடையும் .இக்கீரையை கஷாயமாக அருந்தலாம் .அல்லது பருப்பு மசியல் ,பொரியல் என்றும் கூட சாப்பிடலாம் .

இக்கீரையின் இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தி வரலாம் .

மணத்தக்காளி பழத்திலும் நன்மை உண்டு :

கீரையை போல பழமும் சக்தி வாய்ந்த மருந்தாகும் உடலுக்கு .காச நோயாளிகள் இப்பழங்களை தினசரி சாப்பிட்டு வந்தால் குணமடையும் .

மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு போன்று சிறிய அளவில் தான் இருக்கும் .பசி எடுக்காமல் இருந்தாலும் மணத்தக்காளி பழம் சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும் .

புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகிறதா ,,மணத்தக்காளி பழம் சாப்பிட்டால் உடனே கருத்தரிக்கும் .உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் உதவுகிறது .

நமது உடலில் ஏராளமான சத்துக்களை கொடுக்கிறது .மணத்தக்காளி கீரை மற்றும் பழம் மருத்துவ துறைக்கும் நன்கு பயன்படுகிறது .

பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன் உள்ளதாக அமைகிறது .ஆண்களின் தாது பலம் பெறவும் இப்பழத்தை அவசியம் உட்கொள்ளுதல் வேண்டும் .

உடலில் தேமல் ,வீக்கங்கள் ,பருக்கள் ,கொப்புளங்கள் குணமாக மணத்தக்காளி கீரை சாற்றை தடவினால் சரி ஆகிவிடும் .

எந்த நோயாக இருந்தாலும் மணத்தக்காளி கீரை சாற்றை மோர் ,தயிர் ,பால் ,தேங்காய் தண்ணீர்,இளநீர்  என ஏதாவது ஒன்றில் கலந்து தினமும் குடித்தால் குணமடையும் .

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *