ராக்கியுடன் இணைந்து நடிக்கும் ஸ்ரீகாந்த் …!!!

ஸ்ரீகாந்த் தற்போது நடித்துள்ள படம் ‘ராக்கி’. இந்த படத்தில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நாய்க்குட்டியும் நடித்துள்ளது. ஒரு விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைத்து வளத்து வருகிறார்.

ஸ்ரீகாந்த்,‘ராக்கி க்கான பட முடிவு

 

ராக்கி மிகவும் புத்திசாலியாக நடந்து கொல்வதால் போலீஸ் துப்பறியும் துறையில் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். இந்நிலையில் எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை ராக்கி எப்படி கண்டுபிடிக்கிறது பற்றி இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.