கார்த்தி நடித்த ”கைதி”…. இரண்டாம் பாகம் எப்போது….? வெளியான தகவல்….!!

‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”கைதி”. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கார்த்தி, லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கார்த்தி தற்போது ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் இவர்கள் இருவரும் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *