கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தில் இணையும் அம்மு அபிராமி….!!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதா நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால் நடிக்கிறார். இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image result for அம்மு அபிராமிதிகில் மற்றும் அதிரடி கலந்த குடும்ப உறவுகளை மையப்படுத்தும் கதையாக தயாராகும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். வயாகம் 18 ஸ்டூடியோஸ் வழங்க, பேரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன் சார்பில் ஜோதிகாவின் தம்பி சூரஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். 2019 அக்டோபரில் இந்த படம் வெளி வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.