அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கைக்கு பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு… கர்நாடக காங்கிரஸ் ….!!

அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கர்நாடக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக அரசியலில்  கடந்த 2 வாரமாக உச்சகட்ட தொடர் குழப்பங்கள் நீடித்து வந்தது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக_விற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். MLA_க்களின் ராஜினாமாவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தான் காரணம் என்று ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

Image result for கர்நாடக காங்கிரஸ் கட்சி

MLA_க்களின் ராஜினாமாவை அடுத்து அங்குள்ள ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து நிலவி வந்த குழப்பம் தேசியளவில் எதிரொலித்தது. இந்நிலையில் இன்று கர்நாடக சட்டமன்றத்தில் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. கடும் அமளிகளுக்கிடையே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.