ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து. தற்போது மழையின் அளவு குறைந்து விட்டதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

நீர்வரத்து குறைந்த போதிலும் தொடர்ந்து 14-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் பரிசலில் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நீடித்து இருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.39 அடியாகவும், 87.7 2 டிஎம்சி ஆகவும் உள்ளது அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.