காரைக்குடி- மயிலாடுதுறை விரைவு ரயில் நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்… கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது திருவாரூர்- பட்டுக்கோட்டை – காரைக்குடி ரயில் மார்க்கத்தில் புதிதாக இயங்க இருக்கும் தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. ரயில்வே நிர்வாகம் இயக்க திட்டமிடப்பட்டுள்ள பகல் நேர சோழன் அதிவிரைவு ரயிலுக்கு இணைப்பு ரயிலாக காரைக்குடி- மயிலாடுதுறை விரைவு ரயில் ராமேஸ்வரம் – செகந்திராபாத் விரைவு ரயில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில் போன்ற விரைவு ரயில்களை விரைவில் நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும்.

அதேபோல் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பட்டுக்கோட்டை ரயில் நிலைய சரக்கு முனையத்திற்கு பாராட்டுகளும், சரக்கு முனையம் அமைய விரைந்து நடவடிக்கை எடுத்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிசகர்வால், முதுநிலைக்கோட்டை இயக்க மேலாளர் ஹரிகுமார், முதுநிலைக்கோட்டை வர்த்தக மேலாக செந்தில்குமார் போன்ற அதிகாரிகளுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது. பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்த பின் ரயில் நிலைய வளாகம் முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பூங்காக்கள் அமைக்க வேண்டும். அதேபோல் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.