குலையே நடுங்குது!… கரடியிடம் சிக்கிய இளம்பெண்… பின் நடந்த சம்பவம்…. திக் திக் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது சுற்றுலா பயணிகள் மலைப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அவர்களை நோக்கி கரடி ஒன்று நெருங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அண்மையில் இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்ட 3 பெண்கள் கருப்பு கரடியை எதிர்கொண்டனர். அந்த கரடி பெண் ஒருவரை மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது. அப்போது மற்ற 2 பெண்களும் அசையாமல் இருந்தனர். மேலும் விலங்குடன் செல்பி எடுப்பதற்காக தன் தொலைபேசியை உயர்த்தியபோது, கரடி அப்பெண்ணின் தலையை முகர்ந்து பார்க்க முயன்றது. எனினும் கடைசி வரை அமைதியாக நின்று அந்த கரடியிடமிருந்து தப்பித்தனர். அதிர்ஷ்டவசமாக கரடி இறுதியில் ஆர்வத்தை இழந்து 3 பேரையும் விட்டு வெளியேறியது. இந்த வைரல் வீடியோ டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.