உபேந்திரா, கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் “கப்ஜா”… எப்போது ரிலீஸ்?…. வெளியான தகவல்….!!!!!

டைரக்டர் ஆர்.சந்துரு இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் படம் “கப்ஜா”. இத்திரைப்படம் கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என 7 இந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

கேங்ஸ்டர் வித் ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா , ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஏ.ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு “கே. ஜி எஃப்” படப் புகழ் ரவி பஸ்ரூர் இசை அமைத்திருக்கிறார். கப்ஜா படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்த படம் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17ம் தேதி வெளியாக உள்ளது.

Leave a Reply