
1980 – 81 காலகட்டத்தில் இந்தியா நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு டெஸ்ட் தொடர் மற்றும் ஆறு ஒரு நாள் இன்னிங்ஸ் ஆகிய போட்டிகளில் விளையாடியவர் யோகராஜ் சிங். யுவராஜ் சிங்கின் தந்தையான இவர் கபில் தேவ் இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
இது யோகராஜ் சிங்குக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. காரணம் இன்றி தன்னை அணியிலிருந்து விலக்கி விட்டதாக நினைத்த யோகராஜ் சிங் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கபில் தேவை கொலை செய்ய சென்று விட்டார். அங்கு கப்பில்தேவ் அவரது தாயுடன் இருந்ததை பார்த்த யோகராஜ் சிங் மனம் மாறிவிட்டார்.
கபில் தேவை கடுமையாக திட்டி விட்டு உன்னை கொலை செய்ய தான் வந்தேன். ஆனால் உனக்கு விலைமதிக்க முடியாத தாய் இருப்பதால் நான் உன்னை எதுவும் செய்யப் போவதில்லை என்று கபில் தேவிடம் கூறிவிட்டு தனக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆதங்கத்துடன் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பிறகு தான் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என்று முடிவெடுத்ததோடு தனது மகனை கிரிக்கெட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் யோகராஜ். இதனை அவரே பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.