தண்ணீர் என நினைத்து பெட்ரோலை குடித்த மீனவர் மரணம்!!..அதிர்ச்சியில் ஊர் மக்கள்!!…

பெட்ரோலை குடித்து டென்னிஸ் என்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது .

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் மீன் வியாபாரம் செய்து வருபவர் டென்னிஸ். வழக்கம்போல் மீன்களை வியாபாரம் செய்து கொண்டு வரும் வேளையில் அதிக தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார்


அந்த பாட்டிலில் காருக்கு பயன்படுத்தும் பெட்ரோலானது நிரப்பப்பட்டிருந்தது அதனை டென்னிஸ் தண்ணீர் என்று நினைத்து பாட்டிலில் இருந்த பெட்ரோலை குடித்துவிட்டார். அதன் பின் திடீரென அவர் மயங்கி கிழே விழுந்த அவரை. அக்கம், பக்கத்தினர்  மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி டென்னிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து  கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .