மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கன்னியாகுமாருக்கு நன்கொடைகளை பொதுமக்கள் தாராளமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கன்னையா குமார் பரப்புரை மேற்கொள்ளும் பகுதியில் இருந்த பொது மக்கள் சுமார் 20 லட்சம் வரை நிதி திரட்டி வழங்கி உள்ளனர். கன்னையா குமாரின் தேர்தல் செலவுக்காக ஆன்லைன் மூலமாகவும் பணம் திரட்டப்பட்டு வருகிறது. சிபிஐ தலைவர் ஒருவர் கூறும்போது மக்கள் பல பகுதியிலிருந்து அழைத்து நன் கொடை கொடுக்கின்றனர் என்று தெரிவித்தார்.
இது குறித்து கன்னையா குமார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவிக்கையில் , ஒரு பக்கம் ஆதரவு பெருகி வருகின்றது , மறுபக்கம் சதி நடக்கிறது. பிரச்சாரத்துக்கும் ஆன்லைனில் நன்கொடை திரட்டப்பட்ட இணையதளத்தை சிலர் ஹேக் செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். அதை சரி செய்யும் வேலை நடந்து வருகின்றது. இந்நிலையில் அவரை ஆதரித்து மூத்த இந்திப் பட பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஷபானா அஸ்மி ஆகியோர் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது .