கண்களில் கருவளையமா பயப்பட தேவையில்லை …!!!!! இயற்கை முறையில் எளிமையான டிப்ஸ் ,,,,ட்ரை பண்ணி பாருங்க …

*தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒன்றரை டீஸ்பூன் ,இரண்டையும் கலந்து கண்களில் உள்ள கருவளையத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் .இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் .

*உருளைக்கிழங்கை கழுவி தோலுடன் துருவி சாறெடுத்து ,அந்த சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து பஞ்சை எடுத்தால் கண்களில் கருவளையம் மறையும் .

*பாதாம் எண்ணெய்யை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் எளிதில் மறையும் .இரவில் பாதாம் எண்ணெய் பூசி கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களை கழுவ வேண்டும் .

*வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்து கொண்டு ஓய்வு எடுத்தால் கண்களில் உள்ள கருவளையம் மறைய தொடங்கும் .

*சுத்தமான தேங்காய் எண்ணெய் பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறைய தொடங்கும் .

*சோற்றுக்கற்றாழையின் தோலையும் ,முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்த பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும் .

*பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும் .எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும் .தினமும் இதை செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும் .

*ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்து வந்தால் கண்களில் களைப்பு நீங்கி கருவளையம் மறைய தொடங்கும் .

*மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *