தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் மாயசுடலை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாயசுடலையை கைது செய்ததோடு அவரிடமிருந்த 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.