கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். அப்போது சிக்கரசம்பாளையம் பகுதியிலுள்ள ஒரு தேங்காய் களத்தில் கூலித்தொழிலாளியான மாயி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாயியை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாயியை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த 1 கிலோ கஞ்சா, ரூ.11 ஆயிரம் பணம் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *