“காங்கிரசை குப்பையில் வீசுங்கள்”… முதல்வர் பசவராஜ் பொம்மை அதிரடி ஸ்பீச்…..!!!!

துமகூரு சிக்கநாயக்கனஹள்ளியில் அரசு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று அப்பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது “பெங்களூருவுக்கு அடுத்த முக்கியமான நகரமாக துமகூரு திகழ்கிறது. கடந்த 3  வருடங்களில் பல வளர்ச்சி திட்ட பணிகளை செய்திருக்கிறோம். நடுத்தர மக்கள் மாதம் 70 -80 யூனிட் மின்சாரத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

மக்களை ஏமாற்றுகிற காங்கிரசை குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது, வாக்குறுதி உத்தரவாத அட்டைகளை வழங்கி மக்களை ஏமாற்றுகிற காங்கிரஸ் கட்சியை வருகிற சட்டசபை தேர்தலில் தோற்கடித்து குப்பை தொட்டியில் வீச வேண்டும். மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர மீண்டும் ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply