காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரத்தில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு என்பது ஏற்படுத்தப்பட்டதே அந்த விழிப்புணர்வினை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் தொடங்கி நடத்தி வைத்தார்

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது அதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் ஆனது நடைபெற உள்ளது

மேலும் இந்த தேர்தலில் 100 சதவீத பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதனை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு என்பது நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு ஆவின் பால்பண்ணையில் வைத்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

மேலும் விழிப்புணர்வு பலரிடம் தெரியவேண்டும் என்பதற்காக ஆவின் பண்ணையில் உள்ள பால் டப்பாக்கள் மற்றும் நெய் டப்பாக்கள் போன்றவற்றில் வாக்களிப்பது நமது கடமை என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விற்பனைக்கு தயாராகி உள்ளனர் இந்த ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவர்கள் ஒட்டி  வைத்தார்

மேலும் அங்கே பணிபுரியும் பணியாளர்களின் மொபைல்களுக்கு பின்னால் அந்த ஸ்டிக்கரை ஒட்டி விட்டு அதை விழிப்புணர்வை பலருக்கு தெரியும் படி செய்துள்ளார்