பல தடைகளுக்கு பின்பு வெளியாக இருக்கும் காஞ்சனா 3

காஞ்சனா 2 வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா 3 திரைப்படம் ஆனது ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ளது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது வெளியிட்டதில் இருந்தே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது

நடன குருவாகவும் இயக்குனராகவும் தமிழகத்தில் பிரதிபலித்த ராகவா லாரன்ஸ் அவர்கள் தமிழில் முதன்முதலாக முனி என்ற பேய் படத்தை இயக்கினார் தமிழ் சினிமாவாக இருக்கட்டும் அல்லது இந்திய ஹாலிவுட் சினிமாக்கள் ஆக இருக்கட்டும் பேய் படம் என்றாலே திகில் நிறைந்ததாக இருக்கும் என்ற பாணியை மாற்றி படம் முழுவதையும் நகைச்சுவையாக காண்பித்து கொண்டு சென்று  பார்வையாளர்களை ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்

இந்தப்படம் வெற்றி ஆனதைத் தொடர்ந்து முனி-2 காஞ்சனா என்ற மற்றொரு திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படமும் அதே பாணியில் இயக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது இதனை தொடர்ந்து முனி 3 காஞ்சனா-2 என்ற மற்றொரு திரைப்படத்தை அதே பாணியில் இயக்கிய அதுவும் வெற்றியைப் பெற்றுத் தந்தது இதனை தொடர்ந்து தற்போது முனி 4 காஞ்சனா 3 என்ற தலைப்பில் மீண்டும் அதே பாணியில் மற்றொரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்

இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டது   வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி ட்ரெண்டிங்கில் வலம் வந்தது மேலும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கின்றன

இந்த படத்திற்கு அதிகமாக செலவு செய்து அதன் காரணமாக கடன்கள் அதிகமாக உள்ளதால் அந்த கடன்கள் அனைத்தையும் நிறைவு செய்து தற்பொழுது ரிலீசுக்காக காத்திருக்கிறது வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த படத்தில் நடிகர் விஷால் நடிக்கவிருக்கும் திரைப்படமும் வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *