கணவருக்கு நேர்ந்த கொடுமை…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…. கைது செய்த போலீஸ்….!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் பெருமாள் மகன் தயானந்தன் வசித்து வந்தார். இவருக்கும் தாய்மாமா மகள் அன்னப்பிரியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தயானந்தன் சொந்தமாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதனையடுத்து தயானந்தன் தன்னுடைய நண்பருடன் தொழில் சம்பந்தமாக பேசி விட்டு பின் உறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய மனைவி அன்னப்பிரியா உறவினர்களுக்கு போன் செய்து தன்னுடைய கணவருக்கு ஜன்னி வந்து கீழே விழுந்ததால் தலையில் அடிபட்டு, ரத்தவெள்ளத்தில் கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு தயானந்தன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அதன்பின் உறவினர்களிடம் காவல்துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது தயானந்தன் இறப்பு தொடர்பாக எந்த தகவலும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தயானந்தனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் தயானந்தனின் தாயார் கஸ்தூரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கஸ்தூரி கூறியதாவது “என்னுடைய மருமகளுக்கும், வாலிபர் ஒருவருக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை என்னுடைய மகன் தயானந்தன் கண்டித்து வந்தான். இதனால் என்னுடைய மருமகள் தனது கள்ளக்காதலுடன் சேர்ந்து என் மகன் தயானந்தனை கொலை செய்து விட்டார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு என் மகன் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அன்னப்பிரியாவை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த போது கணவர் இறந்த துக்கம் கூட இல்லாமல் எப்போதும் போல் இருந்தார்.

இதனால் காவல்துறையினர் அன்னப்பிரியாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அன்னப்பிரியா தன் கள்ளக்காதலன் முகேஷ் என்பவருடன் சேர்ந்து கணவரை கொன்றதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார். அதன்படி காவல்துறையினர் கள்ளக்காதலன் முகேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அன்னப்பிரியா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் முகேஷ்  இருவரிடமும் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அன்னப்பிரியா மற்றும் அவருடைய கள்ளக்காதலன் முகேஷ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *