உஷார்!… கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி…. பின் போலீஸ் எடுத்த நடவடிக்கை….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் தாகூர்கஞ் பகுதியில் வசித்து வருபவர் முன்னா. இவர் அதே பகுதியை சேர்ந்த சல்மா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சல்மா தன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மனைவியை வீட்டிற்கு வருமாறு முன்னா பல முறை அழைத்தும், சல்மா போகாமல் பிடிவாதம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சல்மா கோபத்தில் முன்னாவின் நாக்கை கடித்தார். இதனால் முன்னாவின் நாக்கு துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சல்மாவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.