கணவரை கொலை செய்ய முயன்ற சன் டிவி நடிகை…. காரணம் இதுதான்?… போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட முன்னணி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரம்யா. இவர் தன் கணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காரணம் நடிப்பதற்கு தடையாக இருந்ததாக சொல்லி ரம்யா மற்றும் ஆண் நண்பர் டேனியல் இணைந்து கணவர் ரமேஷை கடுமையாக தாக்கி இருக்கின்றனர்.

இதன் காரணமாக பலத்த காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரம்யா மற்றும் அவரது நண்பர் இருவரையும் கைது செய்துள்ளனர்.